மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

டிராபிக் ராமசாமி  போட்டியிடுவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படபோவதில்லை: சரத்குமார்

தோல்விப்பயத்தில் எதிர்க்கட்சிகளை ஒதுங்கியுள்ள நிலையில், டிராபிக் ராமசாமி  போட்டியிடுவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படபோவதில்லை என்றார் சமத்துவ மக்கள்

News image
Updated On :29 மே 2015, 1:49 pm

தோல்விப்பயத்தில் எதிர்க்கட்சிகளை ஒதுங்கியுள்ள நிலையில், டிராபிக் ராமசாமி  போட்டியிடுவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படபோவதில்லை என்றார் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான  சரத்குமார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

சட்டப்பேரவைத் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடுவதற்கு ஜனநாயக உரிமை உள்ளது. தோல்விப்பயத்தில் எதிர்க்கட்சிகளை ஒதுங்கியுள்ள நிலையில், டிராபிக் ராமசாமி  போட்டியிடுவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படபோவதில்லை. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை ஆதரித்து பிரசாரம் செய்வேன்.

எனக்கும், நடிகர் விஷாலுக்கும் தனிப்பட்ட முறையில் எவ்வித பிரச்னையும் இல்லை. சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து தவறான கருத்துகள் பேசுவது கண்டிக்கத்தக்கது.  நடிகர் சங்கத் தலைவராக வர வேண்டும் என்றால் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்கட்டும். நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு மீண்டும் நான் போட்டியிடுவேன்.

பிரதமர் நரேந்திரமோடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில்,  இந்தியாவின் வளர்ச்சிக்காக மக்கள் எதிர்பார்க்கும் எண்ணங்களை செயல்படுத்திட  முன்வர  வேண்டும். அதிமுக- பாரதிய ஜனதா கட்சி  இடையே கூட்டணி அமைவது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்வார்.கூட்டணி எந்த அளவில் உருவாகிறது, எந்த கொள்கையின் அடிப்படையில் உருவாகிறது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். நான் தான் முதல்வர் என்று கூறிக் கொள்ளும் ஒவ்வொரும் இணைந்து கூட்டணி அமைத்தால் அந்த கூட்டணி எப்படியிருக்கும்.

அதே நேரத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி வலுவான கூட்டணி. எனவே வரும் பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.  இக்கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி கூடுதல் இடங்களில் போட்டியிடுவது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றார் சரத்குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.